சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் மோசமாக சேரும் சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.