மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே எஸ்.வெள்ளாகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கேசவன் (வயது 22). இவருடைய தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் கேசவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங் வெடித்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதில் படுகாயமடைந்த கேசவன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.