மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் மாயம்

அருப்புக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் மாயமானது.

Update: 2023-06-23 19:36 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் வங்கியில் இருந்து எடுத்த ரூ.80 ஆயிரம், தான் வைத்திருந்த ரூ.3 ஆயிரம், வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு ஆகியவற்றை ஒரு பையில் வைத்திருந்தார். பின்னர் தனது மகனை பள்ளியில் இருந்து அழைப்பதற்காக செல்லும் போது அந்த பையை தனது மோட்டார்சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுபடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்