பஸ்சில் கண்டக்டர் வைத்திருந்த பணம், டிக்கெட்டுகள் திருட்டு

திருச்செந்தூரில் பஸ்சில் கண்டக்டர் வைத்திருந்த பணம், டிக்கெட்டுகள் திருட்டு போனது.

Update: 2023-02-10 18:45 GMT

திருச்செந்தூர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நல்லூர் தேவன்பட்டியை சேர்ந்தவர் பின்னியப்பன் (வயது 47). இவர், மதுரை மாவட்டம் புதுக்குளம் பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந் தேதி மாலையில் பணிமனையில் டிக்கெட் பண்டல் பெற்றுக்கொண்டு பஸ்சில் டிரைவர் பழனிச்சாமியுடன் மதுரை வழியாக திருச்சிக்கு சென்றார். பின்னர் இரவில் அங்கிருந்து பஸ் புறப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோவில் பஸ்நிலையம் வந்தது. அப்போது கண்டக்டர் பின்னியப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே பணப்பை மற்றும் டிக்கெட் பண்டல்களை பஸ்சில் வைத்து விட்டு டிரைவர் பழனிச்சாமியுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்த பார்த்தபோது, பஸ்சில் வைத்திருந்த பணப்பை மற்றும் டிக்கெட் பண்டல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பணப்பையில் ரூ.1,425 மற்றும் ரூ.80 ஆயிரத்து 500 மதிப்புள்ள டிக்கெட் பண்டல்கள் இருந்தது.

டிரைவரும், கண்டக்டரும் பணப்பையை வைத்து விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர், அவற்றை திருடி சென்றது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து பின்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பஸ்சில் பணப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்