திறந்தவெளியில் கொட்டும் மழையில் உடலை எரித்த அவலம்
வேதாரண்யம் அருகே சுடுகாட்டுக்கு கொட்டகை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொட்டும் மழையில் உடலை எரிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே சுடுகாட்டுக்கு கொட்டகை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொட்டும் மழையில் உடலை எரிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டகை வசதி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செண்பகராயநல்லூர் ஊராட்சி கீழக்காடு பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.
ஆதிதிராவிடர்களின் சுடுகாட்டிற்கு கொட்டகை இல்லாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை திறந்த வெளியில் எரிக்கும் அவல நிலை உள்ளது.
திறந்த வெளியில் உடல் எரிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஜெகதம்பாள் என்ற பெண் இறந்து விட்டார். இவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்போது மழை பெய்ததால் உடலை தகனம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டனர். எனவே ஆதிதிராவிடர்களின் சுடுகாட்டுக்கு கொட்டகை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.