நாயிடம் பூனைக்குட்டி பால் குடிக்கும் அதிசயம்
சந்தவாசல் பகுதியில் நாயிடம் பூனைக்குட்டி பால் குடிப்பதை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்க்கின்றனர்.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்ற நாராயணன்.
இவர் தனது விவசாய பண்ணையில் வளர்க்கும் செல்ல பிராணிகளில், நாய் ஒன்று பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வருகிறது.
.பூனைக்குட்டியின் தாய் இறந்துவிட்டதால், பாசத்தோடு நாய் பால் கொடுத்து வருவது மிகவும் அதிசயமானது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.