அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-24 19:00 GMT

செயல்வீரர்கள் கூட்டம்

சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணியினர் பங்கேற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் சிப்காட்- மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்திற்கு இளைஞரணியினரை தயார்படுத்தும் வண்ணம் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்து பேசினார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இளையராஜா மற்றும் தலைமை கழக மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பாக வரவேற்பு அளிப்பது

கூட்டத்தில் வருகிற 27-ந் தேதி புதுக்கோட்டை வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. புதுக்கோட்டை சிப்காட்- மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெறும் கூட்டத்திற்கு இளைஞரணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், ஒன்றிய, நகர, பேரூர்கழக செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து புதுக்கோட்டை சிப்காட்- மருத்துவக்கல்லூரி சாலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் புதுக்கோட்டை நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்