மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Update: 2023-07-13 21:37 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை 12 மற்றும் 30-வது வார்டு பகுதியில் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 12-வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் அல்லிராணி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி, 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து 30-வது வார்டு நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர் மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, டுவிங்கிளின் ஞானபிரபா, ஜெயகவிதா, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்