முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்

முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்.

Update: 2023-06-21 19:29 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் திருச்சி வந்தபோது, விமானநிலையத்தில் ஒரு சிறுமி முதல்-அமைச்சரிடம் தன்னை படிக்க வைக்க வேண்டும் என உதவி கோரினார். உடனே மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் சிறுமியின் அருகே சென்று அவரது தாயார் கவிதாவிடம் விசாரித்தார். அப்போது கோவையை சேர்ந்த கவிதா தனது கணவர் இறந்துவிட்டதால் 2 குழந்தைகளின் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி கோரினார். இதையடுத்து அவரது 2 குழந்தைகளின் கல்விக்கட்டணத்தை ஏற்பதாக கலெக்டர் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கவிதாவிடம் அவரது குழந்தைகளின் கல்விக்கட்டணத்துக்காக ரூ.61 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார். அப்போது கலெக்டர் பிரதீப் குமார் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்