திருமணம் ஆகாத விரக்தியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
குழித்துறை பெரியவிளையை சேர்ந்தவர் எலியாஸ். இவருடைய மகன் பிரைட் சாலமன் (வயது45), வியாபாரி. வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ெசய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் எந்த வரனும் சரியாக அமையவில்லை.
இதையடுத்து பிரைட் சாலமன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக குடியேறினார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பிரைட் சாலமன் தான் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் பிரைட் சாலமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகாத விரக்தியில் வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.