பொதுமக்களிடம், மேயர் குறை கேட்டார்

சிவகாசி மாநகராட்சி 39-வது வார்டில் பொதுமக்களிடம், மேயர் குறை கேட்டார்.;

Update:2023-04-09 00:40 IST

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டுக்கு உட்பட்ட வி.கே. எம்.தெரு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, பேரண்டாம்மாள் ரோடு, சக்தி கோவில்தெரு, உழவர்சந்தை ஆகிய பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணி, புதிய குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணி, பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், பொறுப்பு கமிஷனர் முகம்மது சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் ராஜேஷ் உடன் இருந்தார். மேயர் ஆய்வுக்கு வந்த போது அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்த சாலை மற்றும் பாலம் அமைக்கும் பிரச்சினையை தீர்த்து வைத்தமைக்கு நன்றி தெரிவித்தனர். அடிப்படை வசதிகளை உடனுக்குடன் சரி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக பொதுமக்களிடம் மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்