சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோவில் கைது
சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம்:
கொத்தனார்
மணிகண்டம் அருகே உள்ள முள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜேஷ் (வயது 22). கொத்தனார். இந்நிலையில் ராஜேஷ், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்றதாக, அச்சிறுமியின் தந்தை மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறைவன் நகர் பகுதியில் ராஜேஷ் அச்சிறுமியுடன் தங்கியிருந்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை ராஜேஷ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.