நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு

நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் ,இறந்தார்.

Update: 2022-09-14 20:06 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் ,இறந்தார்.

நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி (வயது 33). இவர் கேரளாவில் தங்கி கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய தந்தையும், தாயும் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். கடந்த வாரம் ஓணம் பண்டிகைக்காக ஜெபமணி சொந்த ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டின் அருகில் உள்ள குஞ்சுவீட்டு குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அங்கு குளிக்க வந்தவர்கள் ஜெபமணி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் மூழ்கி இறந்த ஜெபமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் ஜெபமணிக்கு அடிக்கடி வலிப்பு நோய் இருந்ததும், இதனால், குளத்தில் குளிக்கும் போதும் வலிப்புநோய் ஏற்பட்டு ஜெபமணி தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்