மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-29 19:54 GMT

நெல்லை ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரிசி, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் குழந்தைவேலு, சி.ஐ.டி.யு. தாலுகா செயலாளர் சரவணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வடை மாலை அணிந்து கொண்டும், இட்லி போன்ற உணவுகளை தட்டில் ஏந்தியபடியும் நூதன முறையில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்