விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி ஆகிய 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது. விருதுநகரில் திடலில் உள்ள தபால் அலுவலகம் முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 96 பெண்கள் உள்பட 231 கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 566 பெண்கள் உள்பட 1,238 பேர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.