மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 19:47 GMT

செஞ்சி, 

மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உணவு வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அக்கட்சியின் வட்ட செயலாளர் முருகன் தலைமையில் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பொதுமக்களுக்கு சரியாக உணவு வழங்கப்படும். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு விட்டுமனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்