கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

ஆலங்குளம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-14 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து மகன் சுப்புக்குட்டி என்ற கார்த்திக் (வயது 28). இவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது, ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்