பெண்ணிடம் சங்கிலியை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றவர் கொலை வழக்கு விசாரணை

பெண்ணிடம் சங்கிலியை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றவர் கொலை வழக்கு விசாரணை வருகிற 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2023-09-27 19:34 GMT

சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் பகுதியை சேர்ந்தவர் ரேகா (வயது 24). இவர் இரு சக்கர வாகனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி சென்ற போது அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை சேதுராப்பட்டியை சேர்ந்த சின்னராசு (24) பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

அவரை ஆனந்த முத்துக்குமார் (48) மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளை ஆனந்த முத்துக்குமார் மீது ஏற்றிவிட்டு தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்காக அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சின்னராசுவை கைது செய்தனர்.

தள்ளிவைப்பு

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் வழக்கை வருகிற 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்