செஞ்சி அருகேமாதா கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது

செஞ்சி அருகே மாதா கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-28 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே கடலாடிகுளம் கிராமத்தில் மாதா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன்பு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் அந்த உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து, அந்த நபரை கையும், களவுமாக பிடித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பெருவலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிவசக்தி(வயது 45) என்பதும், அவர் உண்டியல் பூட்டை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிவசக்தியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்