போலீசாரை தாக்க முயன்றவர் கைது

போலீசாரை தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-06 21:37 GMT

சமயபுரம்:

துவாக்குடி பெல் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). இவர் சிறுகனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுகனூரில் குடிபோதையில் இருந்த இவருக்கும், வேறு சிலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுரேசுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டாக்டர்களை அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு மருத்துவமனை பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகேஷ், பெலிக்ஸ்மான்சிங் என்ற 2 போலீசார் மருத்துவமனைக்கு சென்று சுரேசை விசாரித்தனர். அப்போது போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களை சுரேஷ் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். இதையடுத்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் சுரேசை ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் நேற்று அவரை அடைத்தனர். இதேபோல், திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் அருகே நேற்று மண்ணச்சநல்லூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்றவர்களை குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டியதாக பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் ஹரிநாத்தை(22) போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்