தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது
தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44), தொழிலாளி. இவரது மனைவி சுசியை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி முத்தழகன் (32) தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை தட்டி கேட்ட சிவக்குமாரை முத்தழகன் பிளேடால் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.