தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் பகுதியில் சநதேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அண்ணாநகரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகாகிருஷ்ணன் என்ற மந்திரி (வயது 25) என்பதும், அந்த பகுதியில் வந்து கொண்டு இருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதன்பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாகிருஷ்ணன் என்ற மந்திரிைய கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.