நெலலை அருகே உள்ள தருவை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 28). இவர் ஒரு பெண்ணின் மகளிடம் அடிக்கடி பேசி வந்தார். இதை அந்த பெண் கண்டிக்கவே, அவரை பாலசுப்பிரமணியன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியனை நேற்று கைது செய்தார்.