வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-10 18:45 GMT

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்த பேச்சியப்பன் மகன் சக்தி என்ற பறவை (25) என்பவர் அந்த பகுதியில் வந்து கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி என்ற பறவையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்