சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் சிவகங்கையை அடுத்த கீழக்கண்டனி பகுதியில் போலீசாருடன் ரோந்து வந்தார். அப்போது அந்தப் பகுதியில் மானாமதுரையை அடுத்த வி.புதுக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் (வயது 27) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டு விசாரணை செய்தாராம். வெற்றிச்செல்வன் கையில் வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டி தாக்க முயன்றாராம். இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.