இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது

ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-12 18:45 GMT

பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் சாமுவேல். இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மகிளா விரைவு கோர்ட்டில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலைய வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க வந்திருந்தார். அப்போது அங்கு அதே வழக்கின் எதிரியான ராமநாதபுரம் அரண்மனை கோழிக்கோட்டு தெருவை சேர்ந்த குழந்தைவேலு மகன் மோகன்ராஜ் (49) என்பவர் இன்ஸ்பெக்டரை தனக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என மிரட்டியதோடு அவர் மீது பாய்ந்து அடிக்க வந்துள்ளார். இதுதொடர்பாக மோகன்ராஜ் மீது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்சாமுவேல் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தநிலையில் மோகன்ராஜை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்