ஆட்டோ டிரைவரை மிரட்டியவர் கைது
பத்தமடையில் ஆட்டோ டிரைவரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
பத்தமடை கேசவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 29). புதுக்குடி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (33). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்தமடை மெயின் ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வைத்து வேலுவை ரமேஷ் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலு பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.