பணம் கேட்டு மிரட்டியவர் கைது
திண்டுக்கல் அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாறைப்பட்டி அந்தோணியார் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (23) வந்தார். பின்னர் அவர், அலெக்ஸ் பாண்டியிடம் பீர்பாட்டிலை உடைத்துக் காட்டி செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலெக்ஸ் பாண்டி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.