இரும்பு கம்பி திருடியவர் கைது

விழுப்புரத்தில் இரும்பு கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 17:37 GMT

விழுப்புரம், 

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விழுப்புரம் - புதுச்சேரி- கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ இரும்பு கம்பியை விழுப்புரம் அருகே கொளத்தூரைச் சேர்ந்த ஏழுமலை (வயது48) திருடியதாக தெரிகிறது. இதைபார்த்த தேசிய நெடுஞ்சாலை பணி மேற்பார்வையாளர் குமார் என்பவர், ஏழுமலையை கையும், களவுமாக பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்