அம்மன் சிலையில் தங்கத்தாலி திருடியவர் கைது

அம்மன் சிலையில் தங்கத்தாலி திருடியவரை கைது செய்த போலீசார் தங்கத்தாலியை மீட்டனர்.

Update: 2023-08-31 18:37 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகி ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடைபெற்ற கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது திருத்தங்கலை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 43) என்பவர் அம்மன் கமுத்தில் இருந்த 2 கிராம் தங்கத்தாலியை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தங்கத்தாலியை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்