துணி மூட்டையை திருடியவர் கைது

நெல்லை சந்திப்பில் துணி மூட்டையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-11-02 19:47 GMT

வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்பவர் கடந்த தீபாவளி பண்டிகையின்போது நெல்லை சந்திப்பு சாலையோரத்தில் துணிகளை வைத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ஒரு துணி மூட்டையை திருடி சென்றார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 30) என்பவர் துணி மூட்டையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்