வண்டல் மண் திருடியவர் கைது
வள்ளியூர் அருகே வண்டல் மண் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமம் தேரைகுளம் செல்லும் சாலையில் ராதாபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் துணை மண்டல தாசில்தார் வில்லுடையார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஆய்வு செய்தனர். இதில் புத்துக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் அனுமதியின்றி டிராக்டரில் வண்டல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மேலும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.