ஆடுகளை திருடி காரில் கடத்தியவர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே ஆடுகளை திருடி காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ராமசாமி தர்மபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 27-ந் தேதி இவரது ஆடுகளில் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அங்கு காரில் வந்த ஒருவர் ஆட்டை திருடியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து மெஞ்ஞானபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்செந்தூர் காந்திபுரத்தைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் கன்னிராஜா (35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னிராஜாவை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆடு மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.