கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

கட்டுமான பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-11 18:20 GMT

கரூர் ராயனூர் அருகே உள்ள வெள்ள கவுண்டனூர் பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்தனர். இந்த பொருட்களை ராயனூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 32) என்பவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து தோரணக்கல் பட்டியை சேர்ந்த பாலுசாமி (42) என்பவர் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து வழக்குப்பதிந்து, விஸ்வநாதனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்