மது பாட்டில்களை கடத்தியவர் கைது

மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-23 18:49 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கீரை குடிகாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிகோலஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து சோதனையிட்டார். அப்போது 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்