காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி கிருஷ்ணகிரியில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் படித்து வந்தார். பகுதி நேரமாக கிளினிக் ஒன்றிலும் வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானதால் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரிமங்கலம் அருகே திப்பம்பட்டி பக்கமுள்ள பன்னிகுளம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (19) என்பவர் அந்த மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.