மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஏர்வாடி:
ஏர்வாடி போலீசார் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்தவர் தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் தளவாய்புரத்தை சேர்ந்த சண்முகம் மகன் பெருமாள் (வயது 38) என்பதும், அவர் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.