பாருக்குள் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றவர் கைது
நல்லூர் பகுதியில் பாருக்குள் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றவர் கைது;
ராமநத்தம்
வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள பாரில் எவ்வித அனுமதியும் இன்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளங்கியனூரைச் சேர்ந்த ராஜா(வயது 55) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 650 மிலி கொள்ளளவுள்ள 89 பீர்பாட்டில்கள் மற்றும் 180 மிலி கொள்ளளவுள்ள 8 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.