விவசாயியை அரிவாளால் வெட்டியவர் கைது

கொரடாச்சேரி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-01 18:45 GMT

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

கொரடாச்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முகந்தனூர் நட்டுவாக்குடியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருப்பவர் மணிகண்டன் (32). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று சரவணன் விட்டு கொல்லையில் மணிகண்டனுக்கு சொந்தமான ஆடு மேய்ந்துள்ளது.

இதனை சரவணன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக சரவணனுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சரவணனை அறிவாளால் தாக்கி உள்ளார்.

கைது

இதில் சரவணனுக்கு தலை மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டு, திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். மேலும் மணிகண்டனின் தம்பி தங்கமணி, தாய் சத்யா மற்றும் அவரது உறவினரான கோமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்