நாயை அரிவாளால் வெட்டியவர் கைது

நாயை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-16 18:32 GMT

அன்னவாசல் அருகே உள்ள காரசூரான்பட்டியை சேர்ந்தவர் உஷா (வயது 36). இவர் தனது மகளுடன் காரசூராம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார் அப்போது வி.புதுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் அவ்வழியாக ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். இதனை கண்ட உஷாவின் நாய், ஆடுகளை கண்டு குரைத்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் நாயை வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த நாய்க்கு உஷா சிகிச்சை அளித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்