கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

பணகுடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-08 20:06 GMT

பணகுடி:

பணகுடி அருகே கிருஷ்ணாபுரத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் ஒரு மர்ம நபர் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றார். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ரத்தினகுமார், பணகுடி போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் பணகுடி வடக்கு மெயின்ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், முதலைகுளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 43) என்பதும், கிருஷ்ணாபுரம் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்