கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

ஆம்பூரில் கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-05 18:26 GMT

ஆம்பூர் கஸ்பா பகுதியில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்தக கோவிலில் மர்ம நபர் ஒருவர் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து ரவி என்பவர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த பாபு (வயது 34) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் பாபு விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்