போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்தவர் கைது

போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்தவர் கைது

Update: 2022-08-27 20:30 GMT

திருமங்கலம்

திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் தனியார் மதுபார் உள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஹர்ஷத் முகைதீன்(வயது 29), அவரது தம்பி அஜித் பாஷா(28) இருவரும் மது அருந்தினர். அப்போது பாரில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் விசாரணைக்காக அழைத்தபோது, ஹர்ஷத்முகைதீன் பீர் பாட்டிலால் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைத்தார். மேலும் தன் கையை கீறி கொண்டார். அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அஜித்பாஷாவை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்