அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

நாகையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-13 18:16 GMT

வெளிப்பாளையம்:

நாகை புதிய பஸ் நிலையத்தில், தரங்கம்பாடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜேஷ் நாகையிலிருந்து சிதம்பரம் செல்வதற்காக தயாராக பஸ்சில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் ஜெயபால் (வயது 32) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கையால் உடைத்து டிரைவர் ராஜேசை ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.


மேலும் செய்திகள்