காட்டுமன்னார்கோவிலில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது
காட்டுமன்னார்கோவிலில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா தலைமையில் ஏட்டு நல்ல தம்பி மற்றும் போலீசார் நாட்டார்மங்கலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பழஞ்சநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ஜோதி (வயது 42) என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர், பழஞ்ச நல்லூரை சேர்ந்த செந்தமிழ்செல்வன் மனைவி வேம்பு என்பவரது வீட்டில் கடந்த 3-ந்தேதி 19 கிராம் நகையை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இதையடுத்து ஜோதியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.