பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-16 18:54 GMT

உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி நீலம்பாள் (வயது 55), கூலி தொழிலாளி. இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் மதியழகன் மகன் தவசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தவசி, நீலம்பாள் மற்றும் அவரது மருமகள் பிரியங்காவை (22) தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீலாம்பாள் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பெண்களை தாக்கிய தவசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்