வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்தவர் கைது
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் நல்ஷாத் (வயது 39). இவர் நேற்று முன்தினம் மாலை குப்பாங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் நண்பர்களுடன் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நபர், நவ்ஷாத்திடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், அந்த வாலிபர் பீர்பாட்டிலால் நவ்ஷாத்தின் தலையில் தாக்கி, அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்தார். இது குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தை சேர்ந்த பாலகுரு (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.