தொழிலாளியை தாக்கியவர் கைது

நெல்லை அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-02 18:54 GMT

நெல்லை:

முன்னீர்பள்ளம் மேலச்்செவல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 34). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (52) என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி இருந்தாராம். இதனை திருப்பி கொடுக்காததால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலச்செவல் வாய்க்கால் பாலம் அருகே அப்துல் காதர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்துல் காதர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மருதுகுட்டி விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்