பெண்ணை கல்லால் தாக்கியவர் கைது

கூத்தாநல்லூர் அருகே பெண்ணை கல்லால் தாக்கியவரை கைது செய்தனர்.

Update: 2023-01-22 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி, மரக்கடை, வள்ளுவர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பானுமதி (வயது 57).இவர் தனது கணவர் இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசித்து வரும் ரவி (54) என்பவர் தினமும் மது அருந்திவிட்டு பானுமதியிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல ரவி மது அருந்திவிட்டு அவரிடம் பிரச்சினை செய்து கல்லால் தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த பானுமதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்