வேன் டிரைவரை கத்தியால் தாக்கி நகையை பறிக்க முயன்றவர் சிக்கினார்

சிவகாசியில் வேன் டிரைவரை கத்தியால் தாக்கி நகையை பறிக்க முயன்றவர் சிக்கினார்.

Update: 2022-08-06 18:53 GMT

சிவகாசி

சிவகாசியில் வேன் டிரைவரை கத்தியால் தாக்கி நகையை பறிக்க முயன்றவர் சிக்கினார்.

நகையை பறிக்க முயற்சி

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (வயது 33). வேன் டிரைவர். இவர் சிவகாசி ஜக்கம்மாள் கோவில் அருகில் உள்ள வேன் நிறுத்தம் அருகே உள்ள டீக்கடை முன்பு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 38 வயது மதிக்கதக்க ஒருவர் திருநெல்வேலிக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று வழி கேட்பது போல் நடித்து ரமேஷ்கண்ணன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

அப்போது ரமேஷ்கண்ணன் நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். உடனே அந்த நபர் தான் கொண்டு வந்த கத்தியால் டிரைவர் ரமேஷ்கண்ணனை வெட்டி உள்ளார். இதில் ரத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார்.

கைது

உடனே அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடி வந்து நகையை பறித்து செல்ல முயன்றவரை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை திருநகர் பர்மாகாலனியை சேர்ந்த பாண்டியராஜன் என்கிற ஒத்தக்கண் பாண்டியராஜன் (வயது 38) என தெரியவந்தது.

இவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்